Friday, July 21, 2006

அடித்தவர் அடிபட்டவர் இருவருக்கும் தண்டனை!

லககிண்ண இறுதிப்போட்டியின் போது முறைகேடாக நடந்து கொண்ட பிரான்சு அணியின் தலைவர் சிடான் விவகாரத்தில் தனது தீர்ப்பினை FIFA நேற்று வழங்கியது. இத்தாலிய வீரர் மற்றறாஸியின் அவதூறன வார்த்தைகள் சம்பவத்துக்கு காரணமென முடிவுசெய்தது. ஆனால் மத,இன, அரசியல் ரீதியிலான வார்த்தைகள் கூறப்படவில்லை எனவும் அது திருப்தி கொண்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக 15ந்திகதி மற்றறாஸியும் நேற்று 20ந்திகதி சிடானும் FIFA முன் சமூகமளித்து தங்கள் தரப்பு நியாயங்களை கூறியிருந்தனர். அதன் பின்னர் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

* 7500 சுவிஸ் பிராங்குகளை அபராதப்பணமாகச் செலுத்த வேண்டும்.
*3 சர்வதேசப்போட்டிகளில் விளையாடுவதற்கு தடை. (ஏற்கனவே இனிக்கால்பந்தாட்டபோட்டிகளில் விளையாடுவதில்லை என்பது சிடானின் முடிவு )
*அத்துடன் சிறுவர் இளைஞர் தொடர்பான சமூக நலப்பணிகளில் அவர் ஈடுபட வேண்டும்.

*மற்றறாஸி 5000 சுவிஸ் பிராங்குகளை அபராதப்பணமாகச் செலுத்த வேண்டும்.

*2சர்வதேசப்போட்டிகளில் விளையாடுவதற்கு தடை. (அதனால் ஈரோ2008 க்கான ஆரம்பப்போட்டிகள் முதல் இரண்டில் மற்றறாஸி விளையாட முடியாது.)

முக்கியமாக இவ்விவகாரம் தொடர்பில் சிடானுக்கு வழங்கப்பட்ட தங்கப்பந்து விருது பறிக்கப்படும் எனப்பலரும் கருதியிருந்தனர். ஆனால் அவ்வாறாக நடைபெறவில்லை. சிடான் தங்கப்பந்து விருதை வைத்துக்கொள்ளலாம் என FIFA தீர்மானித்துள்ளது.

No comments: