Friday, July 14, 2006

உலகக்கிண்ணம் 2006.......தகவல் துளிகள்!




சிற்பியின் ஆசை நிறைவேறியது...
18 காரட் தங்கத்தினால் வடிவமைக்கப்பட்டது தற்போதைய உலக கிண்ணம். 36.8 செ.மீ.உயரமும், 6 கிலோ 175 கிராம் எடையுள்ள இக் கிண்ணம் 1974 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தை இத்தாலி வென்று வர வேண்டும் என்று தான் பெரிதும் ஆசைப்படுவதாக கிண்ணத்தை வடிவமைத்த சிற்பி சில்வியோ கஸ்ஸானிகா ( வயது 75) கூறினார். அவரது ஆசையை இத்தாலியவீரர்கள் நிறைவேற்றினர்.

அட்டைகள்
மஞ்சள் அட்டை மொத்தம் 327 (உண்மையில் 2வது மஞ்சள் அட்டையுடன் வெளியேற்றப்பட்டவர்கள் 19 பேரின் கணக்கு இதில் சேர்க்கப்படவில்லை. அதனையும் சேர்த்தால் மொத்தம் 346 ஆகிறது)
சிகப்பு அட்டைகள் மொத்தம் 28
♣அதிகமாக மஞ்சள் அட்டை பெற்ற நாடு போர்த்துக்கல் 24
♣ குறைந்த மஞ்சள் அட்டை அமெரிக்கா 5 சவுதிஅரேபியா 5
♣ அதிகமாக மஞ்சள் அட்டை பெற்றவர் கோஸ்ரின்ஹா (போலந்து) 4 அசமாவோ (கானா) 4
♣அதிகமாக சிகப்பு அட்டை
இத்தாலி 2 நெதர்லாந்து 2 குரேசியா 2 செக் 2 போர்த்துக்கல் 2 அமெரிக்கா 2 சேர்பியா 2
♣அதிகமான அட்டைகள் வழங்கப்பட்ட கறுப்பு ஆட்டம் ... போர்த்துக்கல்(9மஞ்சள் 2 சிகப்பு) எதிர் நெதர்லாந்து (7மஞ்சள் 2 சிகப்பு) வழங்கிய நடுவர் வலன்ரைன் (ருஷ்யா)

♦இம்முறை அதிகவயது வீரர் பி.அலி 40 டுனீசியா(உ. கி. போட்டியில் கமரூன் ஜோஜர் மில்லா1994இல் 42.வயதில் விளையாடினார். இவரே அதிகவயதினர்)

♦மிகக்குறைந்தவயது வீரர் வல்கோற் 17 இங்கிலாந்து (பீலே வும் 17வயதிலேயே முதல் உ.கி. போட்டியில் பங்குகொண்டார்)
♦இளவயது வீரர்கள்(1.1.1985க்குப்அதன் பிறகு பிறந்தவர்கள்) 40 பேர் பங்கு கொண்டனர். அவர்களில் இளவயது நாயகனாகத் தெரிவானவர் பொடொல்ஸ்கி(ஜேர்மனி)

♥அதிக நேரம் விளையாடிய வீரர் லாம் 690 , கனவாரோ 690 நிமிடங்கள்
♥குறைந்த நேரம் விளையாடிய வீரர் அஸோபைபா 1 நிமிடம் (பிறெட் பிரேசில் 3 நிமி)

♠அதிகநேர விளயாடிய கோல்காபாளர் BUFFON இத்தாலி 690 நிமி
♠ குறைந்த நேரம் விளையாடிய கோல்காப்பாளர் வில்லர் (பரகுவே) 7 நிமிடம் மட்டும்

கோல் கணக்கு
♣ அதிக கோலடித்த நாடு ஜேர்மனி 13
♣கோலடிக்காத நாடு டிறினிடாட் 0
♣ 2006 உ.கி.போட்டியின் முதல் கோலை அடித்தவர் ஜேர்மனிவீரர் லாம் .
முதல் விரைவுக்கோல் 1நி8 செக்கனில். அடித்தவர் அசமாஓ கானா(செக்குடியரசுக்கு)
♣2006 உ.கி.போட்டியின் கடைசிக் கோலை அடித்தவர் இத்தாலி வீரர் மற்றறாஸி
♣ஒரு போட்டியில் அதிக(6) கோல் (1) ஆர்ஜன்ரீனா 6:0 சேர்பியா (2) ஜேர்மனி 4:2 கோஸ்ரறிகா
♣அதிக பந்துகளை தடுத்த காப்பாளர் இத்தாலி புப்பன் 27 போர்த்துக்கல் றிகார்டோ 25.
♣ 3 உலகக் கிண்ணத்தில் கோல் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் டேவிட் பெக்காம்.
♣உலகக் கிண்ணத்தில் அதிக கோல் (15வது ) அடித்த சாதனைவீரர் ரொனால்டோ ( முன்னைய சாதனை ஜேர்மனி வீரர் ஜெர்ட் முல்லர் 14 கோல்)
♣இப்போட்டியில் அடிக்கப்பட்டவை மொத்தம் 147 கோல்கள் (வரலாற்றில் அதிக கோல் அடிக்கப்பட்டது 1998ல் 171)
♣1930 முதல் 2006 வரை உலகக் கிண்ண கால்பந்து தொடர்களில் 2063 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன.
தன் பக்கத்துக்கு அடிக்கப்பட்ட Own Goals கோல்கள் மொத்தம் 4
சராசரி கோல் 2.3 (64போட்டிகளில் 147 கோல்கள்)
தண்டணை உதைமூலம் முடிவான போட்டிகள் 4
நீடிக்கப்பட்ட 30 நிமிட நேரத்தில் கோல்களால் முடிவான போட்டிகள் 2
64போட்டிகள் இவ்வாறு முடிந்தன.............!
(1)கோலின் அடிப்படையில் தெளிவாக முடிவானவை 48 போட்டிகள்
(2)வெற்றி தோல்வியின்றி சமமான நிலை 10 போட்டிகள்
(3)நீடிக்கப்பட்ட நேரத்தில் முடிவானவை 2 போட்டிகள்
(4)தண்டனை உதை Penalty Shoot Out மூலம் முடிவானவை 4 போட்டிகள்

♦வெற்றி எதுவும் பெறா நாடுகள் கோஸ்ரறீகா , சேர்பியா, டோகோ (புள்ளி 0)
♦முதல் சுற்றில் முழுமையான வெற்றி பெற்ற நாடுகள் ஜேர்மனி, பிரேசில், போர்த்துக்கல், ஸ்பானியா

♥அதிக குறுங்கடவுகள் (Short passes) போர்த்துக்கல் 2,547,ஜேர்மனி 2,392.
♥அதிக நெடுங்கடவுகள் (Long passes) ஜேர்மனி 821 இத்தாலி 711

♠சிறந்த மனமகிழ்வான ஆட்டத்துக்கு தேர்வான நாடு போர்த்துக்கல்.
♠ஒழுங்கீனத்தில் முதலிடம் பராகுவே.

♣ உலகக் கிண்ணப் போட்டியில் இத்தாலி - ஜேர்மனி அணிகள் 5 முறை மோதியுள்ளன. இத்தாலி 3ல் வெற்றி 2 சமநிலை. ஜேர்மனி 3ம் முறை இப்போது தோற்றுள்ளது.


♣நடுவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு போட்டிக்கும் 40ஆயிரம் டொலர் ஊதியமாக வழங்கப்பட்டது. இதுவே உ.கி. வரலாற்றில் உயர்வானது.
♣உலகெங்குமிருந்து சிறப்பான 21 நடுவர்கள் இவ்வுலககிண்ணப்போட்டியின் 64 ஆட்டங்களுக்கு பணியாற்றினார்கள். அதிகமாக Benito Archundia (Mexico), Horacio Elizondo (Argentina)ஆகியோர் தலா 5 போட்டிகளில் பணியாற்றினார்கள்

பயிற்றுநர் விலகல்
ஒவ்வொரு உலககிண்ணப்போட்டி முடிவிலும் பல பயிற்றுநர்கள் விலகுவதும் விலக்கப்படுவதும் வழக்கமாகிவிட்டது. இம்முறை விலகுபவர்கள் இதுவரை 14பேர். இவர்கள்...
லிப்பி (இத்தாலி),கிளின்ஸ்மென் (ஜேர்மனி), எரிக்சன் (இங்கிலாந்து), பெகர்மேன் (ஆர்ஜென்ரீனா), ஹிட்டின்க் (அவுஸ்திரேலியா), அட்வோகாட் (தென் கொரியா), கிமாரேஸ் (கோஸ்டாரிக்கா), மிக்செல் (ஐவரி கோஸ்ட்), இவான்கோவிக் (ஈரான்), ஸிகோ (ஜப்பான்), லா வோல்பே (மெக்ஸிகோ), ஜனாஸ் (போலந்து), பெட்கோவிக் (சேர்பியா), பீன்ஹாக்கர் (ரினிடாட்).

பார்வையாளர்கள்
64 போட்டிகளையும் காண விளையாட்டரங்கில் கூடியோர் எண்ணிக்கை 3.35 மில்லியன் (3,353,655 ) ஆகும்.
உலககிண்ணப்போட்டியில் இத்தாலிக்கு எதிராக ஜேர்மனி விளையாடிய அரை இறுதிப் போட்டியை யேர்மனியில் அதிகம் பேர் பார்த்தார்கள். வீடுகளில் 31.31 மில்லியன் பேரும் பொது இடங்களில் அமைக்கப்ப்ட்டிருந்த இராட்சத தொலைகாட்சிகளில் 16 மில்லியன் பேரும் கண்டுகளித்தார்கள் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.


விருதுகள்

♥தங்கப்பந்து ..... சிடான் பிரான்சு
♥வெள்ளிப்பந்து ..... கனவாரோ இத்தாலி
♥வெண்கலப்பந்து பிர்லொ இத்தாலி

♠தங்ககாலணி ..... குளோஸ ஜேர்மனி
♠வெள்ளிக்காலணி..... கிறேஸ்போ ஆர்ஜன்ரீனா
♠வெண்கலக்காலணி.....றொனால்டோ பிரேசில்

♥சிறந்த இளவயது வீரன்....... பொடொல்ஸ்கி ஜேர்மனி
♥சிறந்த கோல்காப்பாளர் புப்பன் இத்தாலி
♥மனம்மகிழ்வாட்டம்...... போர்த்துக்கல்
வளரும்
....!


Wednesday, July 12, 2006

புதிய உலகத்தரவரிசை

FIFA RANKINGS (JULY 2006)
ர்வதேச கால்பந்தாட்ட அமைப்புக்கள் சம்மேளனத்தின் புதிய உலகத் தரவரிசைப்பட்டியல் இன்று வெளிவிடப்பட்டது. உலககிண்ணப்போட்டிகளின் பெறுபேறாக பெரு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பிரேசில் தொடர்ந்து தனது முதல் இடத்தினைத் தக்க வைத்துள்ளது.
உலககிண்ணப்போட்டிகளில் பங்கு கொண்டநாடுகளில் காணப்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இவை.
ஏற்றம்
உலக நாயகன் இத்தாலி 13ல் இருந்து 2வது நிலைக்கு முன்னேறியுள்ளது. (+9)
ஆர்ஜன்ரீனா 9ல் இருந்து 3வது நிலைக்கு முன்னேறியுள்ளது. (+6)
பிரான்சு 8ல் இருந்து 4வது நிலைக்கு முன்னேறியுள்ளது. (+4)
இங்கிலாந்து 10ல் இருந்து 5வது நிலைக்கு முன்னேறியுள்ளது. (+5)
ஜேர்மனி 19ல் இருந்து 9வது நிலைக்கு முன்னேறியுள்ளது. (+10)
சுவிச்சர்லாந்து 35ல் இருந்து 13வது நிலைக்கு முன்னேறியுள்ளது. (+22)
உக்ரைன் 45ல் இருந்து 15வது நிலைக்கு முன்னேறியுள்ளது. (+30)
ஐவறிகோஸ்ற் 32ல் இருந்து 20வது நிலைக்கு முன்னேறியுள்ளது. (+12)
பரகுவே 33ல் இருந்து 19வது நிலைக்கு முன்னேறியுள்ளது. (+14)
இறக்கம்
செக்குடியரசு 2ல் இருந்து 10வது நிலைக்கு இறங்கியுள்ளது. (-8)
நெதர்லாந்து 3ல் இருந்து 6வது நிலைக்கு இறங்கியுள்ளது. (-3)
ஸ்பானியா 5ல் இருந்து 7வது நிலைக்கு இறங்கியுள்ளது. (-2)
அமெரிக்கா 5ல் இருந்து 16வது நிலைக்கு இறங்கியுள்ளது. (-11)
கொரியக்குடியரசு 29ல் இருந்து 56வது நிலைக்கு இறங்கியுள்ளது. (-27)
மெக்ஸிகோ 4ல்இருந்து 18வது நிலைக்கு இறங்கியுள்ளது. (-14)
விரிவான அட்டவணை இடதுபுற அட்டவணைகள் பகுதியில்


Monday, July 10, 2006

தங்கப்பந்து சிடானுக்கே!

லககிண்ணப்போட்டி 2006 ஜேர்மனி - யின் சிறந்த வீரருக்கான தங்கப்பந்துவிருது GOLDEN BALL பிரான்சின் அணித்தலைவர் சிடானுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடிடாஸ் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் இவ்விருதினை உலகம் முழுவதிலுமிருந்து ஊடகவிலாளர்கள் வாக்களித்து தேர்வு செய்கின்றனர். அவ்வகையில் 2012 வாக்குகளை வென்ற அவர் இவ்விருதுக்குத் தேர்வானார். அடுத்து இத்தாலியின் அணித்தலைவர் கன்னவாரோ 1977 வாக்குகளும் மும்முறை ஆட்டநாயகன் விருது பெற்றவரான இத்தாலியின் பிர்லோ 715 வாக்குகளும் பெற்றனர்.
மிகச்சிறப்பாக தன் அணியினரை வழிநடாத்திய, சிறப்புற விளையாடிய சிடான் இவ்விருதினை நிச்சயம் வெல்வார் என எதிர்பார்ப்புகள் மேலோங்கியிருந்த வேளையில் அந்நிலைமை கேள்விக்குறியானது. இறுதி ஆட்டத்தில் இத்தாலிவீரரை தலையால் மோதி விழுத்தியதற்காக சிகப்பு அட்டைபெற்று வெளியேற்றப்பட்டமை பெரும் விமர்சனங்களுக்குள்ளாகியது.
ஆனால் இப்போது வெளியான வாக்களிப்பு விவரம் சிடானுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.
கடைசிநேர தப்பிதமான நடத்தையைவிட போட்டியில் அவரது முன்னைய சிறப்பு அம்சங்களைச் சீர்தூக்கிப்பார்த்து ஊடகவியலாளர்கள் வாக்களித்துள்ளனர். வாக்கு வித்தியாசம் (35)குறைந்தமைக்கு அவரது நடத்தை நிச்சயமான காரணமாகிறது. மிகபெரு வித்தியாசத்தில் வெல்வார் எனகிற எதிர்பார்ப்பு முன்பு நிலவியது.
பிரான்சின் தென்புல கடலோர நகர் மார்சயிலில் 23.06.1972 ல் பிறந்தவர் சிடான். பெற்றார் அல்ஜீரியாவிலிருந்து வந்து குடியேறிய இசுலாமிய மதத்தவர். 1994 முதல் பிரான்சின் தேசிய அணியில் பங்கு கொண்டு விளையாடுபவர். 1998பிரான்சு உலககிண்ணப் போட்டியில் பிரான்சு உலககிண்ணத்தை கைப்பற்றுவதற்கு இவரது விளையாட்டுத்திறன் பிரதான காரணியாகியது. அன்றிலிருந்து அவர் பெரும் கதாநாயகனாக மதிப்பளிக்கப்பட்டு வந்தார். பிரான்சு நாட்டுக்காக 107 போட்டிகளில் விளையாடி 37 கோல்களை அடித்துள்ளார். இத்தாலியின் ஜுவென்ரஸ், ஸ்பானியாவின் ரியால் மாட்றிட் ஆகிய கழகங்களுக்காக 306 போட்டிகளிலும் அதற்கு முன்பதாக பிரான்சின் இரு கழகங்களுக்காக 200 போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

உலகக்கிண்ணத்தை இத்தாலி வென்றது!

இப்போதைய உலக கிண்னத்தை வடிவமைத்த சிற்பி ஒரு இத்தாலியர். இம்முறை தனது நாட்டுக்கே அது கொண்டுவரப்படவேண்டும் என அவர் விரும்பியதாக ஒரு தகவலை முன்பு கேள்விப்பட்டு இருந்தேன். தகவல் சரியோ தவறோ தெரியாது. அதன்படி நடந்தேறிவிட்டது.


சற்றுமுன் தங்களுக்கும் பிரான்சுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் வென்று உலக கிண்ணத்தை இத்தாலிவீரர்கள் கொண்டு செல்கிறார்கள்.


இன்றைய இறுதிப்போட்டி படு விறுவிறுப்பானது. போட்டிதொடங்கி 7ம் நிமிடத்தில் ஒரு தண்டனை உதையை பயன்படுத்தி முதல்கோலை சிடான் அடித்தார். மலூடா விழுத்தப்பட்டதால் அந்த வாய்ப்பு வந்தது. பிரான்சு 1:0 எனமுன்னிலைக்கு வந்தது. ஆனால் அந்நிலைமை நீடிக்கவில்லை. 18ம் நிமிடத்தில் மற்றறாஸி


ஒரு கோணர்கிக்கை தலையால் அற்புதமாக இடித்தது ஒரு கோலைப் போட்டார். இருநாடுகளும் கண்ட சமநிலை 100 நிமிடங்களுக்கு மேல் நின்று நீடித்தது.
முதல் 90நிமிட விளையாட்டின்
முன் பாதியில் இத்தாலியின் ஆதிக்கமும் பின் பாதியில் பிரான்சின் ஆதிக்கமும் போட்டியில் காணப்பட்டது. ஆயினும் கோல் எதனையும் எவரும் அடிக்காமையால் 30நிமிட நீடிப்பு நேரம் வழங்கப்பட்டது. அதில் முதல் 15 நிமிடங்களில் மாற்றம் வரவில்லை சில வீரர்கள் மாற்றப்பட்டு இருந்தனர்.
பிரான்சின் முன்னணிவீரர் ஹென்றி 107 நிமிடத்திலும் றிபேறி 100 நிமிடத்திலும் திருப்பி அழைக்கப்பட்டு வில்ரோர்ட், றெசெகுற் இறக்கப்பட்டு இருந்தார்கள். இத்தாலி தரப்பிலும் டொட்டி, பெறோற்ற ஆகியோர் 61ம் நிமிடத்திலும் கமரானோசி 86ம் நிமிடத்திலும் மாற்றப்பட்டு இருந்தனர்.
இறுதி 15வது நிமிடத்தில் மிகப்பரபரப்பான எவரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று இடம் பெற்றது. இத்தாலி வீரர் மாற்றறாஸியை நெஞ்சில் தன் தலையால் இடித்து சிடான் விழுத்தினார். அதனால் சிவப்பு அட்டைபெற்று வெளியேறினார். ஓர் ஒப்பற்ற வீரரான சிடானிடம் இவ்விதமான நடத்தையை எவரும் எதிர்பார்க்கவில்லை.

(இந்த உலககிண்ணப்போட்டிகளில் தங்கப்பந்துவிருதினை இவர் வெல்வார் என எதிர்பார்ப்புகள் இருந்தன. கருத்துக்கணிப்பில் சரிபாதியளவுக்கு அவருக்கு வழங்கப்பட்டு இருந்தது. மீதியைத்தான் மற்றைய் 9 வீரர்கள் பெற்றிருந்தனர். )சிடான் இன்னொரு உலககிண்ணம் விளையாடப்போவதில்லை. வயது 34 ஆகிவிட்டது. பொறுமை காக்காமையால் பெரும் விமர்சனங்களுக்காளாகியுள்ளார். ஒரு முக்கியமான விடயம் என்னவெனில்
1)பிரான்சுக்கு தண்டனைஉதை வழங்கப்படக் காரணமாக மலூடாவை விழுத்தியவர்,
2)தலையால் தட்டி கோலடித்து இத்தாலியை 1:1 எனச் சமநிலைப்படுத்தியவர்,
3)சிடானினால் நெஞ்சில் தலையால் இடித்து விழுத்தப்பட்டவர்
எல்லாமே ஒரேநபர்தான். பெயர் மற்றறாஸி.

சிடான் வெளியேறியபின் 10 பேருடன் பிரான்சு விளையாடியது. இத்தாலி இறுதி நிமிடத்தில் தீவிரம் காட்டியும் கோலடிக்கமுடியவில்லை. எனவே தண்டனை உதைமூலமாக வெற்றியை நிர்ணயிக்கும் நிலை வந்தது. இதில் இரு கோல்காப்பாளர்களும் எந்தக்கோலையும் தடுக்கவில்லை. எனினும் பிரான்சின் வீரர் றேசெகூற் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியமையால் பிரான்சு 5:3 கணக்கில் தோற்றுப்போனது.

2ம் தடவையாக கிண்ணத்தைக் கைப்பற்றும் சந்தர்ப்பத்தை இழந்து பிரான்சு வெளியேற இத்தாலி 4வது தடவையாக உலக கிண்ணத்தைக் கைப்பற்றியது. இப்போது பிரேசில் 5 இத்தாலி 4 ஜேர்மனி 3 என உலககிண்ணத்தை கைப்பற்றிய வரிசைஅமைகின்றது. இனிப் பிரேசிலைப் பிடிப்பது இத்தாலியின் இலட்சியமாகலாம்.
இறுதிப்போட்டியின் நாயகன் இத்தாலியின் பிர்லே.
பந்துக்கட்டுப்பாடு இத்தாலி 55% பிரான்சு 45%
கோல் எத்தனங்கள் இத்தாலி 5 பிரான்சு 13
மஞ்சள் அட்டை இத்தாலி 1 பிரான்சு 3
சிவப்பு அட்டை பிரான்சு 1 (சிடான் உ.கி.இறுதிப்போட்டியில் சிவப்பு அட்டைபெற்ற 4ம் வீரன் என்கிற தகைமையைப்பெற்றுள்ளார்.)