Friday, June 30, 2006

ஜேர்மனியின் வெற்றி! அது லேமனின் வெற்றி!!



0:0/1:1/(4:2pso)=5:3
LEHMANN Jens >>>>>


காலிறுதி ஆட்டத்தின் முதல் போட்டி மிகமிக விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. முதல் பாதி பரபரப்பு இல்லாமல் எத்தரப்பும் கோலடிக்காமல் 0: 0 என முடிவடைந்தது. பின்பாதி தொடங்கியதும் Corner Kick வகையில் றிகுஎல்மே கொடுத்த பந்தை அயாலா தலையால் தட்டியதன்மூலம் ஆர்ஜன்ரீனா முதல் கோலை 49வது நிமிடத்தில்அதிரடியாக இறக்கியது. அத்துடன் விறுவிறுப்பு பற்றிக் கொண்டது. ஜேர்மன் அணியின் வீரர்கள் ஆவேசமடைந்தவர்களாக ஆடத்தொடங்க அவர்களை கோலடிக்காமல் பாது காப்பதிலே அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை ஆர்ஜன்ரீனாவீரர்களுக்கு உருவானது. தங்களது ஒற்றைக் கோலை பாதுகாப்பதில் ஆர்வம் கொண்டிருந்த ஆர்ஜன்ரீனியர்களுக்கு அதிர்ச்சி ஒன்று80வது நிமிடத்தில் கிடைத்தது. BALLACK இடப்புறத்திலிருந்து அனுப்பிய பந்தை லாவகமாக BOROWSKI தூக்கிக்கொடுக்க ஜேர்மனியின் முன்னணி வீரர் KLOSE தலையாலிடித்து கோலாய் (இது அவர்கணக்கில் 5வது) இறக்கினார். அத்துடன் ஜேர்மனிய ரசிகர்களின் ஆரவாரம் பேரலையாய் எழுந்து நாடுமுழுவதையும் பரவசப்படுத்தியது.

அணிகள் இரண்டும் சமநிலை கண்டன. அதன் பின்பு இருதரப்பும் கோலடிக்காமையால் மேலதிக 30 நிமிடத்துக்கான அவசியம் உருவானது. இரு 15 நிமிட விளையாட்டுகள். நிலையில் மாற்றமில்லை. ஆயினும் கடைசி 15 நிமிடத்தில் ஒரு கோலை அடித்துவிட வேண்டுமென்பதில் மிகுந்த ஆவேசத்துடன் ஆர்ஜன்ரீனா வீரர்கள் விளையாடினர். ஆட்டத்தில் 58% பந்தை வைத்திருந்தவர்கள் அவர்கள்தான். ஜேர்மன் தரப்பு 42% மட்டுமே. ஆனாலும் கோல் சமநிலை உடையவில்லை. இதற்கு முன் ஜேர்மனியின் பயிற்றுவிப்பாளர் கிளின்ஸ்மன் - KLOSE , SCHNEIDER , SCHWEINSTEIGER என்பவர்களுக்குப் பதிலாக அதிரடியாக ஆடக்கூடிய ODONKOR (62நிமி), BOROWSKI (74நிமி) NEUVILLE (86நிமி)ஆகியோரை களத்தில் இறக்கியிருந்தார் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. ஆர்ஜன்ரீனா தரப்பில் காயம்காரணமாக கோல்காப்பாளர்ABBONDANZIERI ம் மற்றும் CRESPO , RIQUELME என்பவர்களும் மாற்றப்பட்டு FRANCO, CAMBIASSO, CRUZ என்பவர்கள் உள்வந்திருந்தனர்.

தண்டனை உதை Penalty Kick மூலமாக வெற்றியைத் தீர்மானிக்க வேண்டிய வேளை ஆனதும் ரசிகர்கள் மிக பரபரப்படைந்தவர்களாயினர். இதில் ஜேர்மனி வீரர்கள் சிறப்பாகச் செய்தனர். நெவில், பல்லாக்,பொடெஸ்கி, புறோவ்ஸ்கி நால்வரும் தங்கள் சந்தர்ப்பங்களை கச்சிதமாக செய்து 4 கோல்களை இறக்கினர். ஆர்ஜன்ரீனாக் காப்பாளருக்கு பிடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் கிட்டாத கச்சிதமான அடிகள்!

மறுதரப்பில் குறுஸ்,றொட்ரிகுயெஸ் கோலடிக்க, அயாலா, கம்பியாஸோ ஆகியோர் ஜேர்மனிக் காப்பாளர் ஜென்ஸ் லேமனிடம் கோட்டை விட்டு விட்டனர்.லேமன் அதிசிறப்பாக செயல்பட்டு ஆர்ஜன்ரீனா வீரர்கள் அடித்த இரு பந்துகளை தடுத்துவிட்டார்.

உண்மையில் லேமனின் திறனே ஜேர்மனியின் வெற்றிக்கும் அரையிறுதி நுழைவுக்கும் வழிசெய்தது. இறுதி முடிவாக 5:3 என்கிற வகையில் ஜேர்மனி பெரும் வெற்றியைப் பெற்று அரையிறுதிப்போட்டிக்கு செல்கிறது.



ஆட்டத்தின் நாயகனாக அணித்தலைவர் BALLACK தெரிவாகியுள்ளார். இது 2வது தடவை.

1 comment:

சிறில் அலெக்ஸ் said...

பொன்,
முதலில் இந்த தளத்தை இவ்வளவு தகவல்களுடன் வடிவமைத்திருப்பதற்கு நன்றியும் பாராட்டுக்களும். (உங்கள் முகப்பிலுள்ள தலைப்பு படங்களின் பின்னணியில் சரியாகத் தெரியவில்லை என்பது தவிர).

இந்தப் போட்டியில் அர்ஜெண்டினா ஏதோ நம்ம க்ரிக்கட் மேட்ச் ஃபிக்சிங் செய்தது போல ஆடினார்கள்.

முக்கிய விளையாட்டு வீரர்களை மாற்றி 5, 10 நிமிடங்களிலே ஜெர்மனி சமன் செய்தது. கோல் கீப்பர் மாறியது இன்னுமொரு குறையானது. இரண்டு அணிகளுமே குறிப்பிடத்தகும்படி விளையாடவில்லை.